பரியேறும் பெருமாள் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு, கலை இயக்குனராக த.இராமலிங்கம், படத்தொகுப்பை செல்வா கவனிக்க விரைவில் இப்பட பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.
ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படம் வரும் நவம்பரில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)